பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இதில் நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.இதுபோல, கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிலமாக இருந்தாலும் போலியாக பதிவு செய்திருந்தால் மக்கள் புகாரளிக்கலாம் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு, டிஎன்பிஎஸ்சி மூலமாகதான் மின்வாரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.பழனி நில விவகாரம் குறித்த கேள்விக்கு, பழனி வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என்பது என் கணிப்பாக உள்ளது. பல போலி பத்திரங்கள் 5 ஆண்டுகளில் நடந்துள்ளது. இது தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிறைய இடத்தில் சட்டவிரோத பதிவுகள் நடந்துள்ளது. போலி பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது. ஆனால், ஒன்றாவது கடந்த ஆட்சியில் சிபிசிஐடி விசாரணை சென்றுள்ளதா? பழனி கோவில் நில விவகாரத்தில் நுணக்கமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.5 ஆண்டுகளில் போலியாக பதிவு செய்திருந்தால் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இது கிரிமினல் வழக்கு, அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர் என்றார்.பாமகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும், அரசியல் படுத்துதல் என்பது ஆள்புடிக்கிற வேலை இல்லை என்பது குறித்து திருமா பேசியது திமுகவை தான். குதிரை பேர விவகாரத்தில் பல கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.சென்னையில் இருக்கும்போது அறிவாலயம் போகமாட்டார். லண்டனில் இருந்து மாவட்ட செயலாளர் மீட்டிங் நடத்தும் அளவிற்கு கட்சி உள்ளது. திமுக கூட்டணி கட்சியால்தான் கடந்த ஆண்டுகளில் ஆட்சியமைக்க முடிந்தது. திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது. பதவிக்கும் கட்சியில் சேருவதற்கும் தொடர்பு இல்லை. ஆர்பி உதயகுமார் ஒரே கட்சியில் 5 நிலைப்பாடு எடுக்கக் கூடியவர் பொதுச்செயலாளர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார் என்றும் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். Palani land irregularities revealed in detailed inquiry! Minister C.T.R. Nirmal Kumar