இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் நாங்கள் பந்துவீசவே விரும்புவதாகக் கூறினார். அணியில் மூத்த வீரர்களும் 2 சுழல்பந்துவீச்சாளர்களுடன் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் விளையாடுவதாக ஷுப்மன் கில் தெரிவித்தார். இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 4-0 என இழந்து படுதோல்வி அடைந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி பிர்மிங்ஹமில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து: ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (கீப்பர்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங்கு, ஆதில் ரஷித். இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்ஷர் படேல், குர்னூர் ப்ரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா. ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகள்: தொடரை சமன்படுத்தியது நியூசிலாந்து!England have won the toss and have opted to bat