ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.2026ஆம் ஆண்டு, ஆடிக் கிருத்திகை விழா, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது.தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, திருத்தணி முருகன் கோயிலில் அன்றைய தினம் சிறப்பான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.எனவே, ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆடிக் கிருத்திகை நாளில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். ஏராளமான மக்கள் அன்றைய தினம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். Local holiday announced for Thiruvallur district!