முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

Wait 5 sec.

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முதல்வர் விஜய் பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், திங்கள்கிழமை அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயன் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் போலீஸ் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட பேரவை மார்க்கண்டேயன் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Threat against Chief Minister Vijay... Vilathikulam DMK MLA Markandeyan arrestedமலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிப்பு