சிறந்த உள்நாட்டு வீரருக்கான பார்ட் கிங் விருதை வென்றார் ஆண்ட்ரீஸ் கௌஸ்!

Wait 5 sec.

அமெரிக்காவில் நடைபெற்ற எம்எல்சி டி20 கிரிக்கெட் தொடரில் சிறந்த உள்நாட்டு வீரருக்கான பார்ட் கிங் விருது வாஷிங்டன் ஃபிரீடம் வீரர் ஆண்ட்ரீஸ் கௌஸுக்கு வழங்கப்பட்டது. நடப்பு சீசனின் இறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபிரீடம் அணி, ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.இந்தத் தொடர் ஜூன் 18 முதல் தொடங்கி இன்று (ஜுலை 19) வரை நடைபெற்றது. இதில் 547 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் குவித்தவராக ஆண்ட்ரீஸ் கௌஸ் முதலிடம் பிடித்தார். இவருக்கு சிறந்த உள்நாட்டு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஆண்ட்ரீஸ் கௌஸ் 13 இன்னிங்ஸ்களில் 547 ரன்கள் குவித்தார். அதில் 1 சதம், 3 அரைசதம் அடங்கும். 37 பவுண்டரிகள், 38 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கினார். இந்தத் தொடரில் அவரது சராசரி 45.58ஆகவும் ஸ்டிரை ரேட் 165.25ஆகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. இறுதிப் போட்டியிலும் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் சதம் அடித்த முதல் அமெரிக்க வீரராகவும், அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும் ஆண்ட்ரீஸ் கௌஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் ஃபிரீடம் வீரர் ஆண்ட்ரீஸ் கௌஸுக்கு முன்னாள் அமெரிக்க வீரர் பார்ட் கிங் பெயரிலான சிறந்த உள்நாட்டு வீரருக்கான விருதை அளித்து எம்எல்சி கிரிக்கெட் லீக் கௌரவித்துள்ளது. View this post on Instagram டி20 லீக் இறுதிப் போட்டிகளில் 1 ரன்னில் இருமுறை தோல்வி அடைந்த ஸ்டீவ் ஸ்மித்! Washington Freedom's Andries Gous secures the 2026 Bart King Domestic Player of the Tournament Award