நடிகர் மம்மூட்டிக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு மோகன்லால் வாழ்த்துகள் கூறியுள்ளார்.2024 ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படங்களுக்கான 72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த நடிகர் விருது மம்மூட்டிக்கு கிடைத்துள்ளது. அதற்காக, மலையாளத் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் மோகன்லால் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பிற்கினிய இச்சாக்காவுக்கு (மோகன்லால், மம்மூட்டியைப் பாசமாக அழைக்கும் பெயர்) பிரம்மயுகம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையான தருணம். அவரது திறமைக்கு உரிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது.மேலும், வைக்கம் விஜயலட்சுமிக்கும் எனது வாழ்த்துகள். இது அவரது அசாதாரணமான திறமைக்குக் கிடைத்த அழகிய அங்கீகாரமாகும். இந்த உயரிய கௌரவத்தை அவர் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.சிறந்த ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால் தேசிய விருது பெற்றிருப்பதும், பெமினிச்சி பாத்திமா சிறந்த மலையாளத் திரைப்படமாகத் தேர்வாகியிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ஃபாசில் முகம்மது மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.Heartfelt congratulations to dear Ichakka on winning the National Award for Best Actor for Bramayugam. This is a moment of immense pride for all of us and a recognition that is truly well deserved.My warm congratulations to Vaikom Vijayalakshmi. Her win is a beautiful tribute… pic.twitter.com/BPvLJCbbRu— Mohanlal (@Mohanlal) July 18, 2026 மேலும், கார்த்திக் ஆர்யன், யாமி கவுதம், தனுஷ் மற்றும் 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் கௌரவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியத் திரைப்பட உலகின் செழுமை, பன்முகத்தன்மை மற்றும் சிறப்பை இவ்வாறான உயரிய மேடையில் கொண்டாடப்படுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது.விருது பெற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கலைப் பயணத்தில் மேலும் பல உயரங்களை எட்ட என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, விக்ரமுக்கு தேசிய விருது இல்லையா?ஆதங்கப்படும் ரசிகர்கள்!Mohanlal has congratulated actor Mammootty on the announcement of the National Award.