புது தில்லி: அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.இந்த விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ராகுல் காந்தியும், பொறுப்புக்கூறலையும் பண மீட்பை உறுதி செய்யுமாறு மல்லிகார்ஜுன கார்கேயும் வலியுறுத்தியுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற ராமா் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்ட நன்கொடை மற்றும் காணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக அண்மையில் புகாா் எழுந்தது. இது குறித்து மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு, காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.இந்த விவகாரத்தில் சுதந்திரமான-விரிவான விசாரணை கோரியும், பிரதமா் மோடி மெளனம் கலைக்க வலியுறுத்தியும் அவருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.மோடிக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில், நம்பிக்கையுடன் தங்களது கடின உழைப்பின் பலனை நன்கொடையாக மற்றும் காணிக்கையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த முறைகேடுகளால் "துரோகம் இழைக்கப்பட்டதாக" உணர்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியதுடன், பொறுப்புக்கூறலையும் பண மீட்பை உறுதி செய்யுமாறு அவரை வலியுறுத்தினர்.இந்தக் கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பகிா்ந்து, காா்கே வெளியிட்ட பதிவில், "அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பிரதமா் மோடிக்கு நாங்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளோம். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தா்கள், இந்த திருட்டின் மூலம் துரோகம் இழைக்கப்பட்டதாக உணா்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.Our joint letter to PM Modi demanding an independent and comprehensive investigation into the financial affairs of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust. Lakhs of devotees who donated their hard- earned money with faith, devotion and trust are feeling betrayed by the… pic.twitter.com/FxrQA0YDk7— Mallikarjun Kharge (@kharge) July 19, 2026 பிரதமருக்கு காா்கே, ராகுல் எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ராமா் கோயில் அறக்கட்டளை அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். ஆனால், அறக்கட்டளை உறுப்பினா்கள் மத்திய அரசின் முடிவின் பேரிலேயே நியமிக்கப்பட்டனா் என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர்.அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலர்(சம்பத் ராய்) பிரதமரின் நெருங்கிய கூட்டாளிதான் என்றும் குறிப்பிட்டனர்.எனவே, "இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் நீங்கள் மெளனம் காப்பது ஏற்புடையதல்ல. பொறுப்புடைமை மற்றும் பண மீட்பை உறுதி செய்ய வேண்டியது பிரதமரின் கடமை. பணம், தங்கம், வெள்ளி உள்பட பக்தா்களால் வழங்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் கையாண்ட விதம் உள்பட, அறக்கட்டளையால் கையாளப்பட்ட நிதி விவகாரங்கள் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தினர்.மேலும், அறக்கட்டளையின் கணக்கு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான், தங்களின் காணிக்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை ஒவ்வொரு பக்தரும் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கோரினர்."தவறிழைத்தவா்கள் அனைவரும் அவா்கள் எந்தப் பதவி அல்லது செல்வாக்குள்ளவார்களாக இருந்தாலும் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும். பிரதமா் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும் நடவடிக்கையில்தான் உங்கள் அரசு மற்றும் அறக்கட்டளை மீதான மக்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். நாட்டு மக்கள் அரசின் செல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஹிந்த்!" என்று தெரிவித்துள்ளனா்.ராமர் கோயிலில் வழங்கப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் ஜூன் முதல் வாரத்தில் வெளிச்சத்திற்கு வந்தது; இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அறக்கட்டளையின் இரண்டு மூத்த நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர்.Rahul Gandhi and Mallikarjun Kharge said the prime minister's silence on the issue was unacceptable, and urged him to ensure accountability and restitution.சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி, 34 போ் மாயம்: தேடுதல் பணியில் மீட்புக் குழுவினர்!