மெஸ்ஸி எங்கள் கடவுள்: பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்!

Wait 5 sec.

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி எங்களின் கடவுள் என பாஜக பெண் அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகளை நாளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 12.30 (அதிகாலை) மணிக்கு நடைபெறவுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்ஸி திடலில் நடைபெறவுள்ள இப்போட்டியைக் காண ஏராளமானோர் ஆவலுடன் உள்ளனர். இந்தியாவிலும் கால்பந்து தொடர் பரவலாக அனைத்துத் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. கேரளம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்பந்து இறுதிப்போட்டி குறித்து மேற்கு வங்க அமைச்சர் அக்னிமித்ரா பேசியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மெஸ்ஸி எங்களுக்கு கடவுளைப் போன்றவர். எங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதை நாங்கள் மாற்றிக்கொள்ளாததைப்போல, மெஸ்ஸிக்கு ஆதரவு கொடுப்பதை நாங்கள் மாற்றிக்கொள்ளமாட்டோம்.குழந்தைகளை நாளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறுவேன். மெஸ்ஸியின் விளையாட்டை நம்மால் அன்றாடமும் பார்க்க முடியாது. அவரின் ஆட்டத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனப் பேசியிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சையா? சட்டவிரோத தடுப்புக் காவலா? சோனம் வாங்சுக் மனைவி கேள்விLionel Messi is our God We support him West Bengal Minister Agnimitra Paul