நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். குட் பேட் அக்லி வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். நடிகர் அஜித்தின் அதிக சம்பளம் காரணமாகவே பிற தயாரிப்பாளர்கள் அவரை இயக்க முன்வரவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. இறுதியாக, குட் பேட் அக்லியை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. லாபகரமான படமாக அமைந்தாலும் அந்த நிறுவனம் மீண்டும் அஜித் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை. தற்போது, நடிகர் அஜித்தே அவரது 64-வது படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜித் - 64 படத்தை இயக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஏகே - 64 திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தது. ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ வெளியாகும் என நினைக்கிறேன். அறிவிப்பு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார். ஜன நாயகன் முன்பதிவு தொடக்கம்! தமிழகத்தில் முதல் காட்சி நேரம் இதுதான்!Director Adhik Ravichandran has spoken about actor Ajith Kumar's 64th film.