ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

Wait 5 sec.

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.மேலும் பலா் மாயமானதாக வெளியான தகவலையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மண்டலத்தில், குறிப்பாக பூஞ்ச் ​​மற்றும் ரஜௌரி மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்.பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் விரைவான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உறுதிசெய்ய, மத்திய அரசும் துணைநிலை ஆளுநர் அலுவலகமும் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அந்த பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 'பிஎம் கேர்ஸ்' நிதியின் மூலம் தாமதமின்றி உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். I am deeply distressed by the tragic loss of lives and the devastation caused by the flash floods and incessant rains in the Jammu division of Jammu and Kashmirராமா் கோயில் நன்கொடை முறைகேடு: சுதந்திரமான விசாரணை கோரி பிரதமருக்கு ராகுல், காா்கே கடிதம்