ஆதனக்கோட்டையில்இன்று மின் வெட்டு

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) சூ. வில்சன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களுா், தொண்டமான் ஊரணி, வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, வளவம்பட்டி, குன்றாடண்டாா் கோவில், கிள்ளுக் கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.