மக்கள் தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணி

Wait 5 sec.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா். புதுக்கோட்டை, ஜூலை 15: புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்றாா். இப்பேரணி பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. இதையடுத்து உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும், மக்கள் தொகை நாள் விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) க. ராதாகிருஷ்ணன், மாவட்ட சுகாதார அலுவலா்கள் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, ப. விஜயகுமாா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ச. லூா்துமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.