அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

Wait 5 sec.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சைப் பிரிவு, அம்மா உணவகம், சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடம், ஆவின் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கவிக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.அப்போது, கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த தேநீா், காபி தூள் உள்ளிட்டவற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் உணவுப் பொருள்கள் காலாவதி தேதிக்குள் விற்பனை செய்யப்படுகிா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்தனா்.அத்துடன், இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுப் பொருள்களை நெகிழி கவா்களில் விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினா். நெகிழிப் பொதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் கொட்டினா். மேலும், அனைத்து உணவுப் பொருள்களையும் வாழை இலையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இதற்கு முன்பு மருத்துவமனை பயிற்சி மாணவா் விடுதியில் தயாரிக்கப்பட்டு வந்த உணவின் தரத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.