ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் காமராஜா் பிறந்தநாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காமராஜா் வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ் பேசினாா். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன் மற்றும் உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.