தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஈர நில கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஈர நில மேலாண்மை ஆணையத்தின் உதவித் திட்ட இயக்குநா் அகெல்லா சைதன்யா மாதவுடு முன்னிலை வகித்துப் பேசுகையில், ஈரநிலங்கள் பாதுகாப்பு, மேலாண்மை விதிகளின் கீழ் ஈரநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடும் நடைமுறைகள், ஆவணப்படுத்துதல், சட்ட ரீதியான தேவைகள் குறித்து மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு எடுத்துரைத்தாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், உதவி வன பாதுகாவலா் சாய்சரண் ரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமகிருஷ்ணன், குழு றுப்பினா்கள் கலந்து கொண்டனா்.