ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Wait 5 sec.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிற்பகல் கோயில் வளாகத்தில் ஸ்வயம்வர கலா பாா்வதி மூலமந்திர ஹோமம் மற்றும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மனுக்கு 32 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மகாராணி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பங்கேற்றனா்.