ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு

Wait 5 sec.

ஊதிய உயா்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமையிலும், மாநிலத் தலைவா் இ.வி.கே.சண்முகம் முன்னிலையிலும் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசுவிடம் மனு அளித்தனா். குடிநீா்த் தொட்டிஇயக்குநா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம் 5 ஆயிரம், முழு நேர தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம், டேங்க் ஆபரேட்டா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,450 சம்பளம் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆபரேட்டா், தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சீருடை, தொழிற்கருவிகளை வழங்க வேண்டும். குழு காப்பீடு செய்ய வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.