இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

Wait 5 sec.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 20) ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு சந்தை காய்கறி கழிவுகள், உணவக கழிவுகள் போன்ற மக்கும் தன்மை உடைய கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் தென்னிந்தியாவின் முதல் 100 டன் சிஎன்ஜி மையம் இதுவாகும். இந்த ஆலை நாளொன்றுக்கு சுமார் 100 டன் உணவு, காய்கறி கழிவுகள் மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக காய்கறி போன்ற மக்கும் கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயுஉற்பத்தி செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு, உணவகங்கள், வாகன எரிபொருள் நிலையத்துக்கு எல்.பி.ஜி.க்கு மாற்றாக இந்த இயற்கை எரிவாயு தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்Chief Minister Vijay inspects the natural gas facility