டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்

Wait 5 sec.

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாகக் கூறி டிராமா செய்வதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இன்று (ஜூலை 20) குற்றம் சாட்டினார். மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது தவெகவினர் யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும், ஆனால், முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியார்களுடன் நிர்மல்குமார் பேசியதாவது:''ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பொதுவெளி மேடையில் பேசும்போது முதலமைச்சரை அவதூறாகப் பேசுவதும், கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்குப் பேசுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும். முதலமைச்சரின் கையை உடைப்பேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பேசியிருக்கிறார். இதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த கால திமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 70 வயது பாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்ததுதான் கடந்த கால திமுக ஆட்சி.தாம்பரத்தில் மின் பங்கீடு அதிகம் வருவதாக கூறியுள்ளனர். அங்கு மீண்டும் கணக்கீடு செய்யக் கூறியுள்ளேன். ஏனெனில், மின் கணக்கீடு எடுப்பவர்களில் 5,500 இருக்க வேண்டிய இடத்தில் 800 பேர் தான் உள்ளனர். ஒருவேளை அவர்கள் தவறுதலாக மின் கணக்கீடு எடுத்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுளேன். மின் கணக்கீடு எடுத்தவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது.நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என கூறுவது பொய். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குளறுபடி தான் நடக்கிறது. எனவே, இந்த குளறுபடியான தேர்வில் தரமற்றவர்கள் மருத்துவராக வர வாய்ப்புள்ளது.மேகதாது விவகாரத்தில் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என நாங்கள் அறிவிக்க உள்ளோம்'' என நிர்மல் குமார் பேசினார். வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்து, அலுவலகத்தை திறக்க வைத்த அமைச்சர்!DMK MLA is putting on a drama Nirmal Kumar