கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

Wait 5 sec.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பாத்தபாளையம் தொழிற்சாலையில், ராட்சத பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி, வடமாநில தொழிலாளி ரவி ரஞ்சன்(24) பலியானார்.அதிக அழுத்தம் காரணமாக, பாய்லரின் தலைப்பகுதி தூக்கிவீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.படுகாயமடைந்த தொழிலாளர்கள் 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.One person was killed and four others were critically injured in a fire caused by a boiler explosion at an iron and steel plant near Gummidipoondi.அமோனியா வாயு கசிவு விவகாரம்: மூவரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி