தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.சென்னை தியாகராய நகரில் செயல்படும் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலரும் திமுக நிர்வாகியுமான இளங்கோவன், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் புகார் அளித்தார். அதில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல், திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிா்கொண்டிருந்தனர். இதைப் பயன்படுத்தி சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி. அரசகுமார், தனக்குள்ள அரசியல், அதிகார தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட பி.டி. அரசகுமார், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் சுமார் ரூ. 100 கோடி மோசடி செய்துள்ளாா். எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டி. அரசகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வரும் பி.டி. அரசகுமாரை (59) 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரை 3 நாள்களில் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த் நிலையில், அரசகுமார் மீது, 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இருப்பதால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, நேற்று பி.டி. அரசகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.Chennai City Police Commissioner Amalraj has ordered the invocation of the Goondas Act against P.T. Arasakumar, who was arrested for allegedly defrauding private school administrators of ₹100 crore.கேரளத்தில் 2,000 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!