இன்றைய செய்திகள் ஜூலை 14 -நேரலை

Wait 5 sec.

நலம் டிஎன்மருத்துவத்துறையை சார்ந்த நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூலை 14) தொடக்கி வைத்தார்.நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய்!பணி நியமன ஆணைசென்னையில் மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை வழங்கினார்.மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.ரூ. 100 கோடி மோசடி! திமுக நிர்வாகி மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்!தங்கம், வெள்ளி விலை!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 14) சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 14)பாய்லர் வெடித்து ஒருவர் பலிகும்மிடிப்பூண்டி அருகே உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 755. 83 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!