சென்னையில் மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை வழங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜோசப் விஜய், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும், ரூ. 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 மருத்துவக் கட்டடங்களை திறந்துவைத்து, நவீன உபகரணங்கள் பயன்பாட்டை தொடக்கிவைத்தார்.இதனிடையே, மருத்துவத் துறையைச் சார்ந்த நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையையும் முதல்வர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் வரையிலான நன்கொடையாளர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு எளிமையாக நன்கொடை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளை கொண்டாட விரும்புபவர்கள் 'நலம் TN' அமைப்புக்கு நன்கொடை வழங்கலாம். எந்த மருத்துவமனைக்கு நீங்கள் நிதி கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து நன்கொடை தரலாம். உங்களிடம் இருந்து பெறப்படும் நிதி வெளிப்படுத்தன்மையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.Chief Minister Vijay handed over appointment orders to medical officers!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!