முஸரபானி, ந்கரவா அசத்தல்! டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே!

Wait 5 sec.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை ஜிம்பாப்வே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடரை வென்ற ஜிம்பாப்வே அணி முதலாவது டி20 போட்டியில் விளையாடியது.புலோவயாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் தவ்ஹித் ஹிர்தோய் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார். அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென்னட் 44 ரன்களும், ரியான் பர்ல் 30 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணித் தரப்பில், நஹித் ரானா 4 விக்கெட்டுகளும், முகமது சைஃபுதீன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 19 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஜிம்பாப்வே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணித் தரப்பில் முஸரபானி மற்றும் நகர்வா உள்ளிட்டோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூலை 17) புலோவயாவில் நடைபெறுகிறது.Zimbabwe Beats Bangladesh to Start the T20I Series with a Win! Zimbabwe delivered a strong all-round performance to defeat Bangladesh in the first T20I.