பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அரசியலில் களமிறங்குவதாக வெளியான செய்திகளுக்கு அவரது அலுவலகம் விளக்கமளித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவ்வின் பேரனும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான ஜூனியர் என்டிஆர் விரைவில் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாகச் செய்தி வெளியானது. இந்தச் செய்தி ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கவனம் பெற்ற நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள “ரா என்டிஆர்” எனும் தனியார் நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது அரசியல் பயணத்தைத் துவங்குவதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் நேற்று (ஜூலை 14) அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரா என்டிஆர் எனும் பெயரில் செயல்படும் ஒரு அமைப்பு ஜூனியர் என்டிஆர் உடன் தொடர்புடையது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.ஜூனியர் என்டிஆர்-ஐ பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது அவர் சார்பாகச் செயல்படவோ அந்த அமைப்புக்கு எந்த வகையிலும் அதிகாரம் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!The office of popular Telugu actor Jr. NTR has issued a clarification regarding reports that he is entering politics.