'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி!

Wait 5 sec.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது இந்தியாவின் இளைஞர்களைப் பாராட்டியபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்குவதையடுத்து அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது, இந்தியாவில் இளைஞர்கள் பல துறைகளில் பல சாதனைகளைச் செய்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அவர் பேசும்போது "விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். இந்திய இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 'ஸ்கைரூட்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றும் அந்த குழுவினரின் சராசரி வயது 28 என்று என்னிடம் சொன்னார்கள். நாட்டின் விண்வெளி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான் இந்த பெரும் சாதனையைப் படைத்துள்ளனர். நான் அந்த 56 வயது இளைஞர் ஒருவரைப் பற்றி குறிப்பிடவில்லை" என்று கூறினார். 56 வயது இளைஞர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டு மோடி அவ்வாறு பேசியுள்ளார்.தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் விவாதங்கள் சூடுபிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. I am not speaking of a 56-year-old youth: PM Modi takes dig at Rahul Gandhi நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடி