விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2, சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை ஆகிய 3 தொடர்களும் இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், இந்த மாற்றத்தை சேனல் நிர்வாகம் எடுத்துள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிகை நிரோஷா, ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ், வி.ஜே. தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் இன்று(ஜூலை 20) முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.அய்யனார் துணைவிறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர், டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்தத் தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.அய்யனார் துணை தொடர் இனி வாரத்தின் 7 நாள்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.சிறகடிக்க ஆசைகூட்டு குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.சிறகடிக்க ஆசை தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.It has been announced that the three serials currently airing on Vijay TV Pandian Stores 2, Siragadikka Aasai, and Ayyanar Thunai will henceforth be broadcast seven days a week.வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவு!