அய்யனேரி கிராம திரௌபதி அம்மன் கோயிலில், அம்மனின் 10 சவரன் தங்கத் தாலி திருடுபோன நிலையில், சாமி அருளால் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது.ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு, திரௌபதி அம்மன் மற்றும் பிற உற்சவர் சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக கோயிலின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், பகல் நேரத்தில் பக்தர்கள் வருகை குறைந்திருந்த நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து, அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கத் தாலியை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.சிறிது நேரம் கழித்து கோயில் நிர்வாகத்தினர் அம்மன் சிலையை பார்த்தபோது தங்கத் தாலி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்தச் சூழலில், திங்கள்கிழமை காலை கோயில் பூசாரிக்கு திடீரென அருள் வந்து கோயிலைச் சுற்றி ஓடினார். தொடர்ந்து கோயிலில் உள்ள கருவறைக்குச் சென்ற அவர், கையில் தாலியுடன் திரும்பி வந்து 'என் நகை எங்கேயும் திருடு போகல' எனக் கூறினார். இதனைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். A miraculous event has occurred at the Draupadi Amman Temple in Ayyaneri village: the Goddess's 10-sovereign gold thali (sacred pendant), which had been stolen, was recovered through divine grace.திரௌபதி அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கத் தாலி திருட்டு