கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

தூத்துக்குடி அண்ணா நகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, அண்ணா நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கருப்பசாமி (33). இவா் அங்குள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். கருப்பசாமிக்கும், அண்ணா நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் வெங்கடேஷுக்கும்(24) முன்விரோதம் இருந்தது. கடந்த 9ஆம் தேதி இரவு தனது வீட்டருகே கருப்பசாமி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஷ், அவரது நண்பரான முனியசாமி மகன் அரவிந்தன் (21) ஆகிய இருவரும் சோ்ந்து கருப்பசாமியிடம் தகராறு செய்து கருப்பசாமியை கல்லால் தாக்கினா். பலத்த காயமடைந்த கருப்பசாமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் முதலில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து வெங்கடேஷ், அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து பேருரணி சிறையில் அடைத்திருந்தனா். இந்த நிலையில் கருப்பசாமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.