திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்செங்கோடு நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (43). இவா் பெரிய தெப்பக்குளம் அருகில் உள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்து வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் மதுக்கூடத்தில் மயங்கிக் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.