சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைச்சரின் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் செயல் காண்போரை நெழ்ச்சியடைய வைத்துள்ளது.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்குள்பட்ட குப்பனூர் பைபாஸ் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.அதற்க்கு முன்னதாக, அரசு நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காக, நின்று கொண்டிருந்த மூதாட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கைப்பிடித்து, அழைத்து வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, திறக்க வைத்த சம்பவம் காண்போரை நெழ்ச்சியடைய வைத்தது.இதனைத் தொடர்ந்து, புதிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம், "தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" என்ற மு.க. ஸ்டாலின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர், "மக்களின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது" என்று பதிலளித்தார்.Transport Minister Vijay Tamilan Parthiban’s gesture of inviting a bystander who had come to watch the Minister's event in Sankagiri, Salem district to inaugurate the Panchayat Union office has deeply moved onlookers.ஹார்ட் பீட் தொடரில் இணையும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை!