இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பை வென்ற வீரர்கள்!

Wait 5 sec.

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறைவடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 0-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது. பல இளம் வயது வீரர்கள் இத்தொடரில் பங்கேற்றனர். இதில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் மட்டும் லாமின் யமால் உள்பட 23 வயதுக்குள்பட்ட 7 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பையை வென்றவர்களின் பட்டியலை ஃபிஃபா வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தவர்களைக் காண்போம்.1) பீலே - 17 வயது மற்றும் 249 நாட்கள்ஸ்வீடனுக்கு எதிராக 1958 ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பை வென்றது. இத்தொடரில் மொத்தமாக 6 கோல்கள் அடித்த பீலே இறுதிப்போட்டியில் மட்டும் 2 கோல்களை அடித்தார்.இதில், 5 - 2 என்ற கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி பிரேசில் வென்றது.அணியினருடன் பீலே 2) ரொனால்டோ – 17 வயது மற்றும் 298 நாட்கள்இத்தாலிக்கு எதிரான 1994-ம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் 0 - 0 என்ற கணக்கில் சமன் செய்து பெனால்டியில் 3 - 2 என்ற கணக்கில் வென்றது.இப்போட்டியில், இளம் வீரரான ரொனால்டோ மாற்று வீரராக இருந்த நிலையில், எந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை. ரொனால்டோ 3) கியூசெப்பே பெர்கோமி – 18 வயது மற்றும் 174 நாட்கள்1982-ம் ஆண்டு இத்தாலி அணி இத்தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனி அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அவர் இத்தொடரில் எந்த கோலும் அடிக்கவில்லை. கியூசெப்பே பெர்கோமி 4) கவுடின்ஹோ – 19 வயது மற்றும் 6 நாட்கள்1962-ம் ஆண்டு பிரேசில் அணி இத்தொரின் இறுதிப்போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தியது. இத்தொடரில் கவுடின்ஹோ எந்த கோலும் அடிக்கவில்லை. கவுடின்ஹோ 4) லாமின் யமால் - 19 வயது மற்றும் 6 நாட்கள்2026 உலகக்கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்ற இவர், 1 கோல் அடித்துள்ளார். ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 0-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. லாமின் யமால்6) மார்கோ அன்டோனியோ – 19 வயது மற்றும் 135 நாட்கள்பிரேசில் வீரரான இவர் 1970 உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் விளையாடி கோல் எதுவும் அடிக்கவில்லை. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. மார்கோ அன்டோனியோ7) பாவ் குபார்சி – 19 வயது மற்றும் 178 நாட்கள்2026 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஸ்பெயின் அணியின் நடுக்கள வீரரான இவர் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதிப்போட்டியில் ஸ்பெயின் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. பாவ் குபார்சி8) கிலியன் எம்பாப்பே – 19 வயது மற்றும் 207 நாட்கள்2018 உலகக்கோப்பைப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு 7 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள் அடித்தார் எம்பாப்பே. இறுதிப்போட்டியில் க்ரோசியாவை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில் எம்பாப்பே 1 கோல் அடித்தார். கிலியன் எம்பாப்பே9) மசோலா – 19 வயது மற்றும் 309 நாட்கள்பிரேசில் வீரரான இவர் 1958 உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்தார். இறுதிப்போட்டியில் ஸ்வீடனை எதிர்கொண்ட பிரேசில் 5-2 என்ற கணக்கில் வென்றது. 10) ரூபன் மோரன் – 19 வயது மற்றும் 344 நாட்கள்உருகுவே வீரரான இவர் 1950 உலகக்கோப்பையில் 1 போட்டியில் விளையாடி கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதிப்போட்டியில் பிரேசிலை எதிர்கொண்ட உருகுவே 2-1 என்ற கணக்கில் வென்றது. ரூபன் மோரன்Players who won the Football World Cup at a young age!பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறை சாம்பியன்!