மும்பை: உலகளாவிய சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவடைந்தன.அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 96.53 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு நாள் முழுவதும் ரூ. 96.35 முதல் ரூ. 96.53 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 96.30 ஆக இருந்தது.The rupee fell 14 paise to 96.44 against the US dollar on Monday.சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!