25 கோடி பார்வைகளைக் கடந்த பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள்!

Wait 5 sec.

யூடியூபில் பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள் 25 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. நடிகர் கென் நடித்த யூத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல்களின் வரிசையில் இணைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்ட இப்பாடல், தற்போது யூடியூபில் 25 கோடி (250 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலைக் கென் எழுதி, பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் பாடலான பவள மல்லி பாடலும் 25 கோடி பார்வைகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. கயாடு லோஹருடன் இணைந்து சாய் நடன அசைவுகள் அதிக முறை ரீல்ஸ் விடியோக்களில் பயன்படுத்தப்பட்டது. இளையராஜா இசையமைப்பில் உருவாகும் தட்டுவண்டி!The songs 'Pavazhamalli' and 'Mutta Kalakki' have crossed 250 million views on YouTube.