காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன. காங்கயம் வட்டம், காடையூா் அருகே உள்ள கடலைக்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. விவசாயியான இவரது பசு மாடு, 2 கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை மதியம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், 2 கன்றுக் குட்டிகளையும் கடித்துக் குதறியுள்ளன. இதில் 2 கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன. இது குறித்து காங்கயம் பகுதி கால்நடைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.