அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூச்சுத்திணறச் செய்துள்ள காட்டுத்தீயினால் ஏற்படும் புகை மாசுபாட்டின் செலவை ஈடுகட்ட, கனடா மீதான வரியை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அன்று அச்சுறுத்தினார்.கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அமெரிக்காவின் மினசோட்டா உள்பட பல மாகாணங்கள் புகை மண்டலமாகியுள்ளன.இன்று நிலவரப்படி கனடாவின் காட்டுப் பகுதிகளில் 937 இடங்களில் இன்னும் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக தனது ட்ரூத்சோசியல் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "இது வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியம். இது ஆண்டுதோறும் வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுகின்றது. இந்த மாசுபாட்டால் ஏற்படும் செலவை கனடா செலுத்தும் வரிகளுடன் கட்டாயமாகச் சேர்க்கவேண்டும்.கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிப்பதில்லை. அடிப்படை வன மேலாண்மை மற்றும் குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றை கூட கனடா செய்ய மறுத்துவிட்டது. புகை மாசுபாடு தொடர்பாக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என கனடா பிரதமர் மார்க் கார்னியைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.US blanketed in smoke from Canadian wildfires: Trump threatens to raise tariffsஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக அமெரிக்கா தாக்குதல்; பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்