நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான கான் சிட்டி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதையம்சமுள்ள படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பு கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். யோகி பாபு, வடிவுக்கரசியின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைத்திருந்தன.இந்த நிலையில், கான் சிட்டி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசிக்குப் பின் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!The OTT release date for the film con city, starring actor Arjun Das, has been announced.