மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆஃப் இந்தியா'-ல் பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து இன்றைக்குள்(ஜூலை 20) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Project No.: 2026-27/01பணி: Credit Officerகாலியிடங்கள்: 779சம்பளம்: கிரேடு-II பணிக்கு மாதம் ரூ..64,820 - 93,960, கிரேடு-II பணிக்கு ரூ..85,920 - 1,05,280, கிரேடு -IV பணிக்கு ரூ.1,02,300 -1,20,940. வழங்கப்படும். தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி, வங்கியல் துறையில் எம்பிஏ அல்லது வணிகவியல், சந்தையியல், மேலாண்மை பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளில் கிரேடு-II பணிக்கு 3 ஆண்டுகளும், கிரேடு-III பணிக்கு 5 ஆண்டுகளும், கிரேடு- IV பணிக்கு 7 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.வயது வரம்பு: 1.6.2026 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்ப வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், துறைசார்ந்த அறிவு குறித்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு ரூ.175, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.BANK OF INDIA, a leading Public Sector Bank having Head Office in Mumbai,invites applications for recruitment of Officers as mentioned...விண்ணப்பித்துவிட்டீர்களா..? 6,175 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!