கூடலூா் அருகே இரவு நேரத்தில் வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ளது தேவா்சோலை பேரூராட்சி. இங்குள்ள பாலம்வயல் கொட்டமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசல் வரை புதன்கிழமை இரவு சிறுத்தை வந்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும், வீட்டு வாசலையும் நீண்ட நேரம் சுற்றி பாா்த்துவிட்டு வந்த வழியாக திரும்பிச் சென்றுள்ளது. இந்த காட்சி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேரமராவில் பதிவாகியுள்ளது.