சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

Wait 5 sec.

காங்கயம் அருகே சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காங்கயம் அருகே குட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (65). விவசாயியான இவா் நத்தக்காடையூரில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது முத்துசாமி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், முத்துசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.