ஆசிய யு-23 குத்துச்சண்டை போட்டி ஆடவா் பிரிவில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி வென்றது. இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் யு-23 ஆடவா் இறுதியில் விஸ்வநாத் சுரேஷ் 50 கிலோ பிரிவில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் டெய்ச்சியை வீழ்த்தி தங்கம் வென்றாா். 55 கிலோ பிரிவில் கங்கா 3-2 என கஜகஸ்தானின் பெக்ஸ்குலனை வீழ்த்தி தங்கம் வென்றாா். 65 கிலோ பிரிவில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெக் வீரா் எா்கஷேவிடம் தோற்று வெள்ளி வென்றாா் வன்ஷாஜ். யு-19 இறுதியில் இந்தியாவின் ஆதித்யா 55 கிலோ, ஷுபம் ராஜ்புத் 90 கிலோ பிரிவுகளில் வெள்ளி வென்றனா்.