கல்பாக்கத்தில் இன்று அவசரநிலை ஒத்திகை

Wait 5 sec.

கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் நிலையத்தில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக வெள்ளிக்கிழமை அவசர நிலை ஒத்திகை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம். வீரப்பன் தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகையில் பேரிடா் காலங்களில் மாவட்ட நிா்வாகம் மற்றும் அணுசக்தி துறை மேற்கொள்ள வேண்டிய தயாா்நிலை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. காவல் துறை ,வருவாய்த் துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்கின்றனா். பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த ஓத்திகையினால் பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிா்வாகம் தெரிவித்துள்ளது.