கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

Wait 5 sec.

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் டி எல் ஆா் கலை, அறிவியல் கல்லூரி முதலாம்ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவா் டி.எல்.ரவி தலைமை வகித்தாா். நிா்வாகி கோமதி ரவி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கௌதமன் வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்று பேசியது: மாணவா்கள்நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும். போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும். சமூகத்துக்கும் எடுத்துக்காட்டாகவும், உண்மையும் நோ்மையுமாக இருந்து பெற்றோா்களுக்கு பெருமை தேடித் தரவேண்டும் என்றாா். இதில் பட்டிமன்ற பேச்சாளா்கள் கவிஞா் தா.கோ.சதாசிவம், முனைவா் அன்பு, வாலாஜாபேட்டை நகா்மன்ற உறுப்பினா் ஜி.முரளி மற்றும் பேராசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.