ஒருநாள், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்திய ஐசிசி!

Wait 5 sec.

ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் ஐசிசி புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் மற்றும் 2028 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தென்னாப்பிரிக்காவிலும், டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் நடத்தப்படவுள்ளன.இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இன்று (ஜூலை 15) நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைத் தொடரில் 14 அணிகள் பங்குபெறும். ஆனால், போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது. இதனால், ஒவ்வொரு போட்டியும் சுவாரசியம் நிறைந்ததாகவும், மிகுந்த போட்டி நிறைந்ததாகவும் இருக்கும். இந்த புதிய மாற்றத்தின் மூலம் தொடக்கப் போட்டி முதல் இறுதிப்போட்டி வரை சுவாரசியம் இருக்கும்.மூன்று அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் நடத்தப்படும். அதில் ஒரு அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்றில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற்றுள்ள 6 அணிகளுக்குள் போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 3 அணிகள் அடுத்த சூப்பர் 7 சுற்றுக்குத் தகுதி பெறும். சூப்பர் 7 சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குப் பதிலாக சூப்பர் 10 சுற்றை அறிமுகப்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இரண்டாவது சுற்றில் மோதும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.The ICC has introduced new changes to the ODI and T20 World Cup tournaments.எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே: வாஷிங்டன் சுந்தர்