சொல்லி அடித்த ஸ்பெயின்..! வைரலாகும் பெட்ரி, யமாலின் பழைய பதிவுகள்!

Wait 5 sec.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை முன்பே கணித்த ஸ்பெயின் வீரர்களின் பழைய பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2010ல் உலகக் கோப்பையை வெல்லும்போது ஸ்பெயின் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு (ஜூன் 10, 2025) யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகல் உடன் 2-2 என சமன்படுத்தியது. பின்னர், பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் 3-5 என தோல்வியுற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் பெட்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடன் லாமின் யமால், நிகோ வில்லியம்ஸ் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ”19 07 26” எனப் பதிவிட்டிருந்தார். பெட்ரியின் பழைய இன்ஸ்டா பதிவு. கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தோற்றிருந்தாலும் நாம் உலகக் கோப்பை இறுதியில் விளையாடுவோம் என நம்பிக்கையுடன் அந்தப் பதிவை பதிவிட்டிருந்தார். அதனை லாமின் யமால் தனது ஸ்டோரியில் மறுபதிவிட்டிருந்தார். தற்போது, அந்த நம்பிக்கை 13 மாதங்களுக்குப் பிறகு நிஜமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் ’manifestation’ என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி வருகிறது. நோக்கம் அல்லது லட்சயம் ஒன்றை அடைவோம் என முன்னதாகவே எழுதி வைப்பதுதான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தற்போது, இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.அரையிறுதிக்கு முன்பாகவும் லாமின் யமால். “பிரான்ஸ் அணி எங்களைப் பார்த்து பயப்படும். நாங்கள் அவர்களை கடைசி இரண்டு முறை வீழ்த்தியிருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.அரையிறுதிப் போட்டியில் லாமின் யமால் கோல் அடிக்காவிட்டாலும் முதல் கோல் அடிக்க பெனால்டி வாய்ப்பு அவர்தான் உருவாக்கி கொடுத்தார். பெட்ரி இந்தப் போட்டியில் கடைசியில்தான் மாற்று வீரராக களமிறங்கினார். 7 போட்டிகளில் 6 போட்டிகளில் க்ளீன்ஷீட்டுகளைப் பெற்று, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டீனா அல்லது இங்கிலாந்துடன் ஜூலை 19ஆம் தேதி மோதவிருக்கிறது. 2010 உலகக் கோப்பை லெஜண்டரி இனியெஸ்டாவை ஞாபகப்படுத்தும் டேனி ஓல்மோ! How Pedri and Lamine Yamal manifested Spain's World Cup final into existence