முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது, விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளதுடன் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் பெரிதாக இருக்குமெனத் தெரிகிறது. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் விஜய்யின் இறுதியான படமென்பதால் மிகப் பெரியளவில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டுமே இப்படம் 1000 திரைகளில் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 17 வெளியீடாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி, அன்பே டயானா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இவை நல்ல விமர்சனங்களைப் பெற்றால்கூட பல திரைகளில் நீக்கிவிட்டு ஜன நாயகனை வெளியிடவே வாய்ப்புகள் இருக்கின்றன. அழகான திரைப்படத்தில் ஒரு சிறப்பான தோற்றம்: மாளவிகா மோகனன் The film Jana Nayagan, starring Vijay, is expected to be released on 1,000 screens across Tamil Nadu.