காஸா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் கடந்த 2 நாளிகளில் மட்டும் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் மத்திய பகுதியில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் மீது இன்று (ஜூலை 15) இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வடக்கு காஸாவில் பாலஸ்தீனர்கள் அதிகளவில் தஞ்சமடைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஒரு பெண் மற்றும் 6 காவல் துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். மேலும், கான் யூனிஸ் பகுதியிலுள்ள முகாமின் மீதான இஸ்ரேலிய படைகளின் குண்டுவீச்சில் அங்கு வசித்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ரஃபா அருகிலுள்ள முவாஸி பகுதியில் ஒரு குழந்தையை இஸ்ரேலிய படைகள் சுட்டுக்கொன்றதாகவும் காஸா நிர்வாகத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்தவொரு காரணங்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகளில் 4 பேர் ஹமாஸ் கிளர்ச்சிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை.முன்னதாக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களில் மட்டும் 1,123 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் மட்டும் 73,264 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஹோர்முஸ் நீரிணைக்கு ‘நோ’! புதிய வழியைத் தேர்ந்தெடுத்த அமீரகம்! more than 12 people have been killed in attacks by Israeli forces on Gaza in the last two days alone.