தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்யை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஜூலை 15) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இதுபற்றி, நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம். ‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’ முதல் ‘விஜய் அவார்ட்ஸ்’ மேடை வரை, கோட் திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல்... இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். சகோதரத்துவம், பிணைப்பு... அது தொடர்கிறது” எனக் கூறியுள்ளார்.அரசியலில் களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்?Actor Sivakarthikeyan met TN CM Vijay in person and offered his congratulations.