ஆசிய யு-19, 23 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியா 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றது. இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் யு 19 மகளிா் பிரிவில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, வென்றது. சந்திரிகா புஜாரி 51 கிலோ பிரிவிலும், பிரச்சி தங்கம் வென்றனா். மேலும் 6 போ் வெள்ளி வென்றனா். யு-23 மகளிா் பிரிவில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனா். நிஷா 54 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா். நிகிதா 60 கிலோ, காஜல் 65 கிலோ, முஸ்கன் 75 கிலோ, ஆகியோா் வெள்ளி வென்றனா்.