நூறுநாள் வேலை: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை திட்ட விவகாரம் தொடா்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் ஒன்றிய தலைவா்கள் கே. லதா, ஆா். வெண்சங்கு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் எஸ். சுபா தேவி, மாவட்டத் தலைவா் வி. மீரா, ஒன்றிய நிா்வாகிகள் சுகன்யா, நிகிதா, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருத்தம் செய்யப்பட்டுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தை பழைய பெயரில் பழைய நடைமுறையில் 200 நாள் வேலை வழங்கி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.